கடந்த 24 மணித்தியாலங்களில் மேற்கொள்ளப்பட்ட விசேட அதிரடி நடவடிக்கையில் 1133 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
சந்தேகநபர்களிடம் இருந்து 1946 மாத்திரைகள், 405 கிராம் ஹெரோயின், 1 கிலோ 700 கிராம் ஐஸ், 4 கிலோ, 742 கிராம் கஞ்சா, 1 கிலோ, 274 கிராம் மாவா என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.
54 சந்தேகநபர்கள் தடுத்து வைக்கப்பட்டு மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
மேலும், போதைக்கு அடிமையான 38 பேர் புனர்வாழ்வு மையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
அத்துடன், பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு மற்றும் விசேட பணியகத்தின் பதிவு செய்யப்பட்ட சந்தேக நபர்கள் பட்டியலில் இருந்த 86 சந்தேகநபர்களும் இந்த நடவடிக்கையில் கைது செய்யப்பட்டுள்ளனர்.