ஆதித்யா எல்-1 விண்கலம் சூரிய ஒளி வட்டப் பாதையில் நிலைநிறுத்தப்பட்டுள்ள நிலையில் மனிதகுலம் பயன் பெறும் வகையில் அறிவியலில் புதிய எல்லைகளை அடைவதற்கு இந்தியா தொடர்ந்து பணியாற்றும்” என இந்தியப் பிரமதர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார்.
கடந்த வருடம் செப்டம்பர் மாதம் 2ம் திகதி ஸ்ரீ ஹரிகோட்டாவிலுள்ள விண்வெளி ஆய்வு மையத்திலிருந்து ஆதித்யா எல்-1 விண்கலம் விண்ணில் செலுத்தப்பட்டது.
பூமியில் இருந்து 15 லட்சம் கிலோ மீற்றர் தொலைவில் உள்ள லாக்ராஞ்சியன் பாயின்ட் ஒன் எனும் புள்ளிக்கு அருகில் நிலைநிறுத்த இஸ்ரோ தீர்மானித்தது.
இதற்கமைய, 127 நாட்களாக சூரியனை நோக்கி சீரான வேகத்தில் பயணித்த ஆதித்யா விண்கலம், தற்போது எல்-1 புள்ளியை மையமாகக் கொண்ட சூரிய ஒளி வட்டப் பாதையில் இன்று மாலை 4 மணியளவில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டுள்ளது.
இதையடுத்து சூரியன் தொடர்பான ஆய்வுகளை மேற்கொள்வதற்காக விண்கலத்தினை விண்ணிற்கு செலுத்திய அனுப்பிய நான்காவது நாடு என்ற பெருமையை இந்தியா பெற்றுள்ளது.
ஆதித்யா எல் 1 விண்கலம் சுமார் 5 ஆண்டுகள், ஆய்வுப்பணிகளை மேற்கொள்ளும் என இஸ்ரோ விஞ்ஞானிகளை மேற்கோள்காட்டி இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்தியா புதிய மைல்கல்லை எட்டியுள்ளதுடன் மந்றுமொரு அடையாளத்தை உருவாக்கியுள்ளதாகவும் விஞ்ஞானிகளின் அர்ப்பணிப்புக்கு இது ஒரு சான்றாகும். எனவும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு தனது எக்ஸ் பக்கத்தில், பாராட்டு தெரிவித்துள்ளார்.