உயர்தரப் பரீட்சை நிலையங்களுக்கு மேலதிக மண்டபத் தலைவர்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
பரீட்சை நிலையங்களில் மோசடிகள் இடம்பெறுவதை தடுக்குக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பிரதிப் பரீட்சைகள் ஆணையாளர் லசிக சமரகோன் தெரிவித்துள்ளார்.
உயர்தரப் பரீட்சை தொடர்பில் இதுவரை பரீட்சை முறைகேடுகள் எதுவும் பதிவாகவில்லை.
இதேவேளை, அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்காக கல்கிரியாகம மற்றும் மனம்பிட்டியவில் இரண்டு விசேட பரீட்சை நிலையங்கள் தொடர்ந்தும் இயங்கி வருகின்றன.
கல்கிரியாகம மத்திய மகா வித்தியாலயத்தில் நிறுவப்பட்டுள்ள பரீட்சை நிலையத்தில் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களின் எண்ணிக்கை 37 என்பதுடன்
மனம்பிட்டிய சிங்கள மகா வித்தியாலயத்தில் நிறுவப்பட்டுள்ள பரீட்சை நிலையத்தில் 129 மாணவர்கள் பரீட்சைக்குத் தோற்றவுள்ளதாக பிரதிப் பரீட்சைகள் ஆணையாளர் லசிக சமரகோன் மேலும் தெரிவித்துள்ளார்.