மின் கட்டண திருத்தம் தொடர்பான முன்மொழிவு ஆணைக்குழுக்கு கிடைக்கப்பெற்றதாக கூறப்படும் தகவல் உண்மைக்கு புறம்பானது..!

மின் கட்டண திருத்தம் தொடர்பான முன்மொழிவொன்று தனது ஆணைக்குழுவின் அனுமதிக்காக சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக வெளியான தகவல் உண்மைக்கு புறம்பானது தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை மின்சார சபை இவ்வாறான முன்மொழிவொன்றை இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் கையளித்துள்ளதாக சில ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளதாகவும், ஆனால் தற்போது வரை அவ்வாறான முன்மொழிவு ஆணைக்குழுவிற்கு கிடைக்கப்பெறவில்லை எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Social Share

Leave a Reply