மத போதனைகளை திரிபுபடுத்தி மேற்கொள்ளப்படும் செயற்பாடுகளுக்கு எதிராக புதிய சட்டங்களை உருவாக்குவதற்க தீர்மானித்துள்ளதாக புத்தசாசன, மத மற்றும் கலாச்சார அலுவல்கள் அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க தெரிவித்துள்ளார்.
மத போதனைகளால் சமூகத்தில் பதற்றத்தை ஏற்படுத்தும் சிலரின் செயற்பாடுகளை தடுக்கும் வகையில் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.
மத போதனைகளை மூலம் நபர் ஒருவர் ஆற்றிய பிரசங்கங்களையடுத்து குறித்த நபர் மற்றும் அவரைப் பின்பற்றுபவர்கள் தற்கொலை செய்து கொண்டமை தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
நாட்டின் சட்ட கட்டமைப்பிற்குள் அனைவரும் அவரவர் மதத்தை கடைப்பிடிக்கக்கூடிய சூழலை உருவாக்க தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க மேலும் தெரிவித்தார்.
இதேவேளை, சமூகத்தை சிதைக்க முயற்சிக்கும் நபர்களின் மத நம்பிக்கைகள் தொடர்பில் ஆராய அமைச்சரவை குழுவொன்றையும் நியமித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.