ஜனாதிபதித் தேர்தல் அல்லது பொதுத் தேர்தல் ஆகிய இரண்டு பிரதான தேர்தல்களில் ஒன்றை இந்த வருடம் ஒக்டோபர் மாதத்திற்குள் நடத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
நீண்ட இராஜதந்திர சேவைக்குப் பின்னர் இலங்கையை விட்டு வெளியேறும் இலங்கைக்கான நியூசிலாந்து உயர்ஸ்தானிகர் மைக்கல் அப்பிள்டன் உடனான சந்திப்பின்போதே விவசாய அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.
மேலும், இது தேர்தல் ஆண்டு எனவும், இந்த வருடம் ஒக்டோபர் மாதத்துடன் நிறைவடைவதாக கருத்தில் கொண்டு அனைத்து அபிவிருத்தித் திட்டங்களையும் உடனடியாக நடைமுறைப்படுத்துமாறு அறிவுறுத்தியுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.