இந்த ஆண்டுக்கான கல்விப் பொது தராதர உயர்தரப் பரீட்சையின் விவசாய விஞ்ஞான பாடத்திற்கான பரீட்சை இரத்து செய்யப்பட்டுள்ளது.
குறித்த பாடத்திற்கான விவசாய விஞ்ஞான பாட பரீட்சைத்தாள்கள் சமூக வலைத்தளங்களில் நேற்று வெளியானதையடுத்து, இவ்வாறு பரீட்சை இரத்து செய்யப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
இரத்து செய்யப்பட்ட பரீட்சை மீண்டும் நடாத்தப்படும் திகதி குறித்து பின்னர் அறிவிக்கப்படும் என அவர் மேலும் அறிவித்துள்ளார்.