நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்திற்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
தேசிய மக்கள் சக்தியினால் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் மக்களின் இறையாண்மை, அரசியலமைப்பினால் உறுதி செய்யப்பட்ட மக்களின் அடிப்படை உரிமைகளை சவாலுக்கு உட்படுத்தும் வகையில் அமைந்துள்ளதாக மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.