தாய்வானில் இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தலில் ஆளும் கட்சி வேட்பாளரான லை சிங் டி 40 சதவீதத்துக்கும் அதிகமான வாக்குகளால் வெற்றி பெற்றுள்ளார்.
தாய்வானில் இன்று காலை 8 மணிக்கு ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்கெடுப்பு ஆரம்பமானது.
விரைவில் அவர் ஜனாதிபதியாக பதவியேற்கவுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கிழக்கு ஆசியாவில் பசிபிக் கடலில் சீனாவிற்கு அருகே, தாய்வான் அமையப்பெற்றுள்ள நிலையில் இந்த நாட்டினை சீனா அங்கீகரிக்காததோடு தனது நாட்டின் ஒரு பகுதியாகவே கருதுகின்றது.
ஜனநாயக முற்போக்கு கட்சி சார்பில் லை சிங் டி போட்டியிட்டதுடன் அவரை எதிர்த்து சீன ஆதரவுபெற்ற தேசியவாத கட்சியின் ஹவ் யொ-ஹி, ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்ட நிலையில் தோல்வியடைந்துள்ளார்.
தாய்வானில் ஜனாதிபதி தேர்தல் இடம்பெற்றுள்ள நிலையில் சீன ராணுவம் பகிரங்க மிரட்டல் விடுத்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.