எதிர்வரும் காலங்களில் முட்டை விலை மேலும் குறைவடையும் என விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
அகுனகொலபலஸ்ஸ பகுதியில் நேற்றைய தினம் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
முட்டையொன்றின் விலை 65 ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் தற்போது 50 ரூபா முதல் 55 வரை விற்பனை செய்யப்படுகின்றது.
இந்நிலையில் முட்டை விலை மேலும் குறைவடையும் என தெரிவிக்கப்படுகின்றது.