வடக்கு தான்சானியாவில் சுரங்கமொன்றில் ஏற்பட்ட மண்சரிவு காரணமாக 22 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்த விபத்து பரியாடி மாவட்டத்தில் உள்ள நங்கலிடா சுரங்கத்தில் சம்பவித்துள்ளது.
பலத்த மழை காரணமாக செயற்பாடுகள் மட்டுப்படுத்தப்பட்ட பிரதேசத்தில் குழுவொன்றினால் அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்பட்டதையடுத்து மண்சரிவு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பலத்த மழை காரணமாக திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளமையினால் குறித்த பகுதிக்கு செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.