மிஹி ஜய செவன பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் ஐஸ் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளதாக கொழும்பு வடக்கு பிரிவு குற்றப் புலனாய்வுப் பிரிவு தெரிவித்துள்ளது.
கொழும்பு வடக்கு குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளுக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில், முன்னெடுக்கப்பட தேடுதல் நடவடிக்கைகளின்போது, குறித்த நபர் மோதர பொலிஸ் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
27 வயதான சந்தேக நபர் வெபட கணேபொல பிரதேசத்தை சேர்ந்தவர் எனவும் சந்தேக நபர் மாளிகாகந்த நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.