தொழிற்சங்களின் பணிபகிஷ்கரிப்பிற்கு ஆதரவு வழங்கும் நோக்கில் மன்னாரில் போராட்டம்..!

நாடளாவிய ரீதியில் 72 தொழிற்சங்கள் ,இணைந்து ,இன்று காலை முதல் பணிப்பகிஷ்கரிப்பை முன்னெடுத்துள்ளன.

வைத்தியர்களின் கொடுப்பனவு 35 ஆயிரம் ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில் ஏனைய சுகாதார ஊழியர்களின் கொடுப்பனவுகளை அதிகரிக்குமாறும் தேவையற்ற இடமாற்றங்களை உடனடியாக நிறுத்துமாறு கோரியும் பணி பகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இந்த பணிப்பகிஷ்கரிப்பு நாளை காலை 08 மணி வரை முன்னெடுக்கப்படவுள்ளதாக நிறைவுகாண் மருத்துவ தொழில்வல்லுநர்களின் கூட்டமைப்பின் ஏற்பாட்டாளர் ரவீ குமுதேஷ் அறிவித்துள்ளார்.

இந்நிலையில், மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் சுகாதார பணியாளர்கள் இன்று காலை முதல் பணி பகிஷ்கரிப்பில் ஈடுபட்டிருந்ததுடன் மாவட்ட வைத்தியசாலையின் முன்பாக போராட்டமொன்றினையும் முன்னெடுத்து தமது ஆதரவினை வழங்கியிருந்தனர்.

இதன்காரணமாக மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் அவசர சேவையைத் தவிர ஏனைய அனைத்து சேவைகளும் ஸ்தம்பிதம் அடைந்துள்ளன.

மேலும் தூர இடங்களிலிருந்து வருகை தந்திருந்த நோயாளர்கள் பல்வேறு அசௌகரியங்களை எதிர்நோக்கியிருந்தனர்.

பல்வேறு வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகள் ஏந்தியவாறும் கோஷங்களை எழுப்பியவாறும் போராட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது.

இதன்போது, இலங்கை சுகாதார சேவைகள் சங்கத்தின் வடமாகாண தலைவர் இர்ஹாம்,ஊடகங்களுக்கு ,இவ்வாறு கருத்து தெரிவித்தார்,

“இலங்கை அரசாங்கம் வைத்தியர்களுக்கும்,பல்கலைக்கழக விரிவுரையாளர்களுக்கும் 35000 ரூபா கொடுப்பனவை அதிகரித்துள்ளது.அதை நாங்கள் வரவேற்கிறோம், இதேவேளை சுகாதார ஊழியர்களாகிய எமது கொடுப்பனவையும் அவ்வாறு அதிகரிக்குமாறே கேட்கின்றோம். எங்களுடைய சேவையானது நாட்டிற்கு மிகவும் அவசியமானதொன்றாக ,இருந்தும் நாங்கள் புறக்கணிக்கப்பட்டிருக்கிறோம்.

அரசாங்கம் ,தைக் கருத்தில் கொண்டு எங்களுடைய கொடுப்பனவையும் அதிகரிக்க வேண்டும் மேலும், 2024 ஆண்டிற்கான ,இடமாற்றங்களை உடனடியாக நிறுத்த வேண்டும். தூர ,இடங்களுக்குச் சென்று பணி பரியும் ஊழியர்கள் எதிர்நோக்கும் அசௌகரியங்களைக் கருத்தில் கொண்டு தேவையுள்ளவர்களுக்கு மாத்திரம் இடமாற்றம் வழங்க வேண்டும். இந்தக் கோரிக்கைகளுக்கு அரசு செவி சாய்க்காவிட்டால் எமது சுகையின விடுமுறைப் பணிப்புறக்கணிப்பானது தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும்.”

தொழிற்சங்களின் பணிபகிஷ்கரிப்பிற்கு ஆதரவு வழங்கும் நோக்கில் மன்னாரில் போராட்டம்..!

Social Share

Leave a Reply