மன்னார் தாழ்வுபாடு பகுதியில் போதை மாத்திரைகளுடன் ஒருவர் கைது!

இராணுவ புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் மன்னார் பொலிஸார்,குற்றப் புலனாய்வுப் பிரிவினருடன் இணைந்து நேற்று (16.01) மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது, வீடொன்றிலிருந்து சட்ட விரோத போதை மாத்திரைகள் கைப்பற்றப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

கைப்பற்றப்பட்ட போதை மாத்திரைகளுடன் அதை வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டில் 54 வயதுடைய நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபரை இன்று நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தவுள்ளதாகப் பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.

Social Share

Leave a Reply