கல்வி அமைச்சின் விசேட அறிவிப்பு..!

2023 ஆம் ஆண்டுக்கான மூன்றாம் தவணையின் இரண்டாம் கட்டம் எதிர்வரும் 05 ஆம் திகதி ஆரம்பிக்கப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

கல்விப்பொதுத் தராதர உயர்தரத்திற்கான விவசாய விஞ்ஞானப் பாட பரீட்சையினை எதிர்வரும் முதலாம் திகதி நடாத்துவதற்கு பரீட்சைகள் திணைக்களம் தீர்மானித்துள்ளது.

2023 ஆம் ஆண்டுக்கான மூன்றாம் தவணையின் இரண்டாம் கட்டம் எதிர்வரும் முதலாம் திகதி ஆரம்பிக்கப்படும் என கல்வி அமைச்சு முன்னர் அறிவித்திருந்தது.

இந்நிலையில் குறித்த பரீட்சைக்கு முன்னதாக வினாத்தாள் கசிந்தமையினால்பரீட்சையை மீள நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, விவசாய விஞ்ஞான பாடத்தின் இரண்டாம் வினாத்தாள் எதிர்வரும் முதலாம் திகதி காலை இடம்பெறவுள்ளதுடன் முதலாம் வினாத்தாள் பரீட்சை பிற்பகல் 1 மணி முதல் 3 மணி வரை இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Social Share

Leave a Reply