சர்வதேச காற்பந்து மதியஸ்தர்களாக 14 பேருக்கு உயர்வு

சர்வதேச காற்பந்து மத்தியஸ்தர்களாக 14 பேருக்கு இலங்கை காற்பந்தாட்ட சம்மேளனம் உயர்வு வழங்கியுள்ளது. இலங்கை காற்பந்தாட்ட சம்மேளனத்தில் நடைபெற்ற நிகழ்வில் அவர்களுக்கான சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளன.

களுத்துறை டிலான் பெரேரா, கொழும்பு நிவோன் றொபேஷ், கம்பளை லக்மால் வீரக்கொடி, அம்பாறை மொஹமட் ஜப்ரான், கம்பஹா சசங்க மதுசங்க ஆகியோர் சர்வதேச காற்பந்தாட்ட சம்மேளன மதியஸ்தர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

கம்பளை புத்திக ஹேமதுங்க, பதுளை சஞ்சீவ பிரேம்லால், பண்டாரவளை இரான் உதயகாந்த, கொழும்பு புத்திக டயஸ், கம்பஹா L. S. D. குணவர்தன, மத்துகம D. D. I. சந்தநாயக, களுத்துறை லஹிரு ஜயனித்தி ஆகியோர் சர்வதேச காற்பந்தாட்ட சம்மேளன உதவி மதியஸ்தர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

கொழும்பை சேர்ந்த பபசார மினிசாரநி சர்வதேச காற்பந்தாட்ட சம்மேளன மகளிர் நமத்தியஸ்தராக நியமிக்கப்பட்டுள்ளார். அத்தோடு கொழும்பை சேர்ந்த மாலிகா மதுஷானி சர்வதேச காற்பந்தாட்ட சம்மேளன மகளிர் உதவி நமத்தியஸ்தராக நியமிக்கப்பட்டுள்ளார்.

Social Share

Leave a Reply