குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்ட முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவை எதிர்வரும் 15ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மாளிகாகந்த நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளினால் நேற்று (02.02) கைது செய்யப்பட்ட அவர் இன்று (03.02) மாளிகாகந்த நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்திய கடன் திட்டத்தின் கீழ் இலங்கைக்கு தரமற்ற மருந்து கொள்வனவு மோசடி தொடர்பில் முன்னாள் சுகாதார அமைச்சரிடம் நேற்று 10 மணித்தியாலங்களுக்கு மேல் வாக்கு மூலம் பதிவு செய்யப்பட்டிருந்தது.