துபாயில் மரணமடைந்த சகோதரியின் உடலை சொந்த ஊருக்கு கொண்டு செல்ல தூதரகம் உதவிட இலங்கை பெண் கோரிக்கை விடுத்துள்ளார்.
இலங்கையைச் சேர்ந்த ரெஜினா கணராஜ் எனும் 38 வயதுடைய பெண், துபாயில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்துள்ளார். இந்த நிலையில் உடல் நலக்குறைவால் துபாய் ராஷித் அரசு ஆஸ்பத்திரியில் கடந்த ஜனவரி மாதம் 24ம் திகதி உயிரிழந்துள்ளார்.
இது குறித்து துபாயில் வசித்து வரும் அவரது சகோதரி செல்வமேரி கூறியதாவது :
குடும்ப சூழ்நிலை காரணமாக கணவர் மற்றும் மூன்று பிள்ளைகளை இலங்கையில் விட்டு விட்டு துபாய் நகருக்கு எனது சகோதரி வேலைக்கு வந்தார். இந்த நிலையில் அவரது திடீர் மரணம் எங்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. அவரது உடலை பார்க்க வேண்டும் என அவரது பிள்ளைகள் மிகவும் ஏங்குகின்றனர். அவரது உடலை இலங்கைக்கு கொண்டு செல்ல ஏழாயிரம் திர்ஹாம் செலவாகும். இந்த செலவை செய்வதற்கு எனக்கு வசதியில்லை. எனவே எனது சகோதரியின் உடலை சொந்த ஊருக்கு கொண்டு செல்ல இலங்கை தூதரகம் உதவிட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.
மேலதிக விபரங்களுக்கு அழையுங்கள் : – +971 56 801 4002 (உயிரிழந்த பெண்ணின் கணவர்)


