சிலி நாட்டில் பரவிய காட்டுத் தீ காரணமாக 46 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஜனாதிபதியை மேற்கோள்காட்டி தகவல்கள் வெளியாகியுள்ளன.
இருநூறுக்கும் மேற்பட்ட குடியிருப்பாளர்கள் காணாமற் போயுள்ளதாக கடலோர சுற்றுலா நகரமான வினா டெல் மார் நகரின் மேயர், தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் 43 ஆயிரம் ஹெக்டேயர்களுக்கு மேல் தீயினால் பாதிக்கப்பட்டுள்ளதாக உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
அதிக வெப்பம் மற்றும் பலத்த காற்று வீசியதால் தீ பரவியுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.