ஆவா குழுவின் தலைவர் கொழும்பு, கல்கிஸ்ஸையில் வைத்து நேற்று(04.02) இரவு கைது செய்யப்பட்டுள்ளார். கல்கிஸ்ஸையில் உள்ள இரன்டு மாடி வீடு ஒன்றின் இரண்டாம் மாடியில் வைத்து 01 கிராம் 300 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருளுடன் ஊழல் தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
யாழ்ப்பாணத்தில் பல சட்டவிரோத செயல்களுடன் ஆவா குழுவுக்கு தொடர்புள்ளதாகவும், அதன் தலைவர் நாட்டை விட்டு தப்பி செல்வதற்கு தயாரான நிலையில் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.