இலங்கைக்கு கடத்த முற்பட்ட பெருமளவிலான போதைமாத்திரைகளுடன் நபரொருவர், இந்தியாவில் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்திய கடலோர காவல்துறையினர் முன்னெடுத்த சோதனை நடவடிக்கையின் போது, குறித்த நபர் பெரிய பட்டினம் கடற்கரை பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன்போது, அவரிடமிருந்து 7 இலட்சம் ரூபா பெறுமதியான போதை மாத்திரைகள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன் குறித்த நபர் பயணித்த படகொன்றும் கைப்பற்றப்பட்டுள்ளது.