அநுர மற்றும் இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் இடையே சந்திப்பு..!

இந்தியாவிற்கு உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள தேசிய மக்கள் சக்தியின் தலைவர் உள்ளிட்ட தூதுக்குழுவினர் இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் வினய் மோகன் குவாத்ராவை சந்தித்துள்ளனர்.

இதேவேளை, தேசிய மக்கள் சக்தியின் தலைவருக்கும், இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவாலுக்கும் இடையிலான சந்திப்புஇடம்பெற்றது.

இந்த சந்திப்பானது சர்தார் பட்டேல் பவனில் நேற்று நடைபெற்றுள்ளது.

இலங்கை மற்றும் இந்தியாவுக்கு இடையிலான பிராந்திய பாதுகாப்பு மற்றும் இருதரப்பு உறவுகள் தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது.

முன்னதாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சரை, தேசிய மக்கள் சக்தியின் தலைவர் உள்ளிட்ட தரப்பினர் சந்தித்து கலந்துரையாடியிருந்தனர்.

இந்திய அரசாங்கத்தின் அழைப்பின் பேரில் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் உள்ளிட்ட குழுவினர் 5 நாட்கள் உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டு நேற்றைய தினம் இந்தியாவிற்கு விஜயம் மேற்கொண்டுள்ளனர்.

இந்த விஜயத்தின் போது, புது டில்லி, அஹமதாபாத் மற்றும் திருவனந்தபுரம் ஆகிய நகரங்களுக்கு விஜயம் மேற்கொண்டு பல முக்கிய சந்திப்புக்களில் ஈடுபடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Social Share

Leave a Reply