100 மெகாவோட் Ground Mount Solar திட்ட ஒப்பந்தம் கைச்சாத்து..!

100 மெகாவோட் நிலத்தடி சோலார் பேனல் மின் உற்பத்தித் திட்டத்திற்கான மின்சாரம் கொள்வனவு ஒப்பந்தத்தில் இலங்கை மின்சார சபையும் ரிவிதானவி தனியார் நிறுவனமும் இன்று (8) கைச்சாத்திட்டுள்ளன.

மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர, இந்த திட்டத்திற்கான விளம்பரத்தினை 2022ம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் வெளியிட்டதன் பின்னர், 2023ம் ஆண்டில் முன்மொழிவை மதிப்பீடு மேற்கொள்ளப்பட்டதையடுத்து திட்டம் மிகக் குறைந்த மற்றும் வெற்றிகரமான முன்மொழிவுக்கு வழங்கப்பட்டது.

ரிவிதானவி, லக்தனவி மற்றும் Windforce PLC ஆகிய மூன்று நிறுவனங்களின் கூட்டு நிறுவனமாகவும், சிங்கப்பூரின் The Blue Circle நிறுவனமாகவும், இந்த திட்டத்தில் அந்த நிறுவனம் 132 மில்லியன் டொலர்களை முதலீடு செய்யும் என்றும் மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

Social Share

Leave a Reply