நிகழ்நிலை காப்பு சட்டத்தில் குறைபாடுகள் காணப்படுமாயின் திருத்தங்களை மேற்கொள்வதற்கு தயாராகவுள்ளதாக நீதியமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ, நாடாளுமன்றில் இன்று (08) முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்களுக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
நிகழ்நிலை காப்பு சட்டத்தின் சில பிரிவுகளை நீக்குவதற்கு அல்லது அதில் திருத்தங்களை மேற்கொள்வதற்கு உயர் நீதிமன்றம் பரிந்துரைத்திருந்த போதிலும் அதனை அரசாங்கம் கவனத்திற்கு எடுக்கவில்லை என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவினால் குற்றம் சுமத்தப்பட்டது.
இந்த விடயத்தில் நாடாளுமன்ற செயற்பாடுகளையும், அரசாங்கம் மீறியுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
இதன்போது, நிகழ்நிலை காப்பு சட்டத்தில் குறைபாடுகள் காணப்படுமாயின் திருத்தங்களை மேற்கொள்வதற்கு தயாராகவுள்ளதாக நீதியமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.