அனுர மற்றும் கேரள மாநில தொழிற்துறை அமைச்சர் இடையே சந்திப்பு..!

தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திசாநாயக்க உள்ளிட்ட குழுவினர் கேரள மாநிலத்தின் தொழில்துறை அமைச்சர் ராஜிவை சந்தித்துள்ளனர்.

மாநிலத்தின் தலைநகரான திருவனந்தபுரத்தில் இன்று (09) இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

ஐந்து நாட்கள் விஜயம் மேற்கொண்டு இந்தியா சென்றுள்ள தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திசநாயக்க உள்ளிட்ட குழுவினர் இன்றைய இறுதி நாளில் இந்தியாவின் கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சி நிலவும் கேரளாவிற்கு பயணம் மேற்கொண்டனர்.

இதன்போது, தொழில் மற்றும் சட்டம் தொடர்பிலான அமைச்சர் ராஜிவினை சந்தித்துள்ளனர்.

இதனையடுத்து அவர்கள் விக்ரம் விண்வெளி ஆய்வுக்கூடத்திற்கு கண்காணிப்பு விஜயம் மேற்கொண்டமை குறிப்பிடத்தக்கது.

Social Share

Leave a Reply