மஹகும்புக்கடவல, செம்புகுளிய மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் நபரொருவர் உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவம் இன்று பிற்பகல் இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதன்போது காயமடைந்த நபர் புத்தளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதையடுத்து கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
எவ்வாறாயினும் சிகிச்சைப் பலனின்றி குறித்த நபர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.