நாடாளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் பயணித்த கார் விபத்தில் சிக்கியது..!

நாடாளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் பயணித்த வாகனம் விபத்திற்குள்ளாகியதில், ஒருவர் காயமடைந்துள்ளார்.

புத்தளம் – அநுராதபுரம் பிரதான வீதியின் 15ம் மைல் கல்லிற்கு அண்மையில் இன்று(13) அதிகாலை 1.00 மணியளவில் விபத்து ஏற்பட்டுள்ளது.

புத்தளத்திலிருந்து அனுராதபுரம் நோக்கி பயணித்துக் கொண்டிருந்த  அலி சப்ரி ரஹீம் கார், அதே திசையில் பயணித்த டாக்டர் ரக வகானத்துடன் மோதியுள்ளது.

விபத்தின் காரணமாக டாக்டரில் பயணித்த நபர் காயமடைந்துள்ளதுடன், சிகிச்சைகளுக்காக புத்தளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அலுத்கம பகுதியை சேர்ந்த ஹர்ஷன பிரதீப் எனும் நபரே இவ்வாறு காயமடைந்துள்ளதாக அடையாளம் காணப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில்  அலி சப்ரி ரஹீமின் கார் ஓட்டுநர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சாலியவெவ பொலிஸார், சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். 

Social Share

Leave a Reply