அரசாங்க நில அளவையாளர் சங்கத்தினர், இன்று (13) தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட தீர்மானித்துள்ளனர்.
நில அளவை செய்யும் பணியை தனியார் மயமாக்குவதை உடனடியாக நிறுத்தல், உள்ளிட்ட 3 கோரிக்கைகளை முன்வைத்து தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடவுள்ளனர்.
அரசாங்க நில அளவையாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் உரிய அதிகாரிகளுக்கு அறியப்படுத்தியிருந்த போதும், நியாயமான தீர்வு வழங்கப்படவில்லை என்பதினால் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட தீர்மானித்ததாக குறித்த சங்கத்தின் தலைவர் துமிந்த உடுகொட தெரிவித்துள்ளார்.