கிண்ணியா பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட குடியிருப்புக்காணிக்கான காணி ஆவணங்கள் அற்ற விண்ணப்பதாரர்களுக்கு காணிக்கச்சேரி நேற்று (15.02) கிண்ணியா பிரதேச செயலாளர் எம்.எச்.எம் கனி அவர்களின் தலைமையில் நடுத்தீவு கிராம உத்தியோகத்தர் பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு நடுத்தீவு சமூக பாராமரிப்பு நிலையத்தில் இடம்பெற்றதாக கிண்ணியா மாவட்ட ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.
இதன் போது கிண்ணியா பிரதேச செயலக காணி உத்தியோகத்தர், காணிக்கிளை உத்தியோகத்தர்கள், கிராம உத்தியோகத்தர் மற்றும் விண்ணப்பதாரர்களும் கலந்து கொண்டனர்.