காலாவதியான கோஸ்டிக் சோடா மீட்பு!

களுத்துறையில் அமைந்துள்ள அரச நிறுவனமொன்றில் விற்பனை செய்யப்பட்டு வந்த சுமார் ஒரு கோடி ரூபா பெறுமதியான 45 மெற்றிக் தொன் காலாவதியான கோஸ்டிக் சோடாவை நுகர்வோர் அதிகார சபை கையகப்படுத்தியுள்ளது.

இதன்போது சோப்பு உற்பத்திக்காக சராசரி விலையை விட 3,500 ரூபாய் குறைந்த விலையில் விற்பனை செய்யப்பட்து வந்த, தலா 25 கிலோ கொண்ட, 1,857 மூட்டைகள் நுகர்வோர் அதிகார சபை கைப்பற்றியுள்ளது.

காலாவதியான ‘கோஸ்டிக் சோடா’ கையிருப்பு தொடர்பில் தற்போது விசாரணை நடத்தப்பட்டு வருவதாக நுகர்வோர் விவகார அதிகாரசபையின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

Social Share

Leave a Reply