மட்டக்களப்பில் இடம்பெற்ற வாகன விபத்தில் நபரொருவர் உயிரிழந்துள்ளார்.
தன்னாமுனை பகுதியில் நேற்றிரவு (16) இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
இதன்போது காயமடைந்த நால்வர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சைப் பலனின்றி நபரொருவர் உயிரிழந்துள்ளார்.
மேலும் மூவர் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சைப் பெற்று வருவதாக தெரிவிக்கப்படுன்றது.
முச்சக்கர வண்டியொன்றும் லொறியொன்றும் மோதியதில் விபத்து சம்பவித்துள்ளது.
விபத்து தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.