அரசாங்கம் பௌத்த மதத்திற்கு எதிராக செயற்படுகின்றது – எதிர்கட்சித் தலைவர் பகிரங்க குற்றச்சாட்டு 

அரசாங்கம் பௌத்த தேரர்களை இழிவுபடுத்தும் செயற்பாடுகளை முன்னெடுப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

அனுராதபுரத்தில் இன்று(17) இடம்பெற்ற பிக்குகள் ஆலோசனை பேரவையின் மாவட்ட மாநாட்டில் உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்தார்.

பௌத்த மதத்திற்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் என அரசியலமைப்பில் குறிப்பிடப்பட்டுள்ள போதும், மிஹிந்தலை புனித பூமியில் அமைந்துள்ள மிஹிந்தலை ரஜ மகா விகாரையின் மின்சாரம் கூட துண்டிக்கப்பட்டுள்ளதையும் எதிர்கட்சித் தலைவர் சுட்டிக்காட்டினார். 

பௌத்த பிக்குகள் மேற்கொள்ளும் சமய சேவைகள் உட்பட ஏனைய சேவைகளையும் நிறுத்தறுத்தும் விதமாக அரச கட்டமைப்பு  செயற்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

ஐக்கிய மக்கள் சக்தி அமைக்கும் அரசாங்கத்தில் சம்புத்த சாசனத்தை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என எதிர்க்கட்சித் தலைவர் வலியுறுத்தினார்..

மேலும், ‘தலதா மாளிகைக்கு குண்டு வைத்தவர்களால் நாட்டைக் கட்டியெழுப்ப முடியுமா?’ என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.

பயங்கரவாதத்தை தோற்கடித்ததற்கான கௌரவத்தையும் மரியாதையையும் முப்படைகளுக்கு வழங்காமல் ஒரு சில குடும்பங்கள் அதனை எடுத்துக் கொண்டதாகவும் சஜித் பிரேமதாச குற்றம் சாட்டினார். 

Social Share

Leave a Reply