புதுடில்லியில் ஏற்பட்ட தீ விபத்தில் 130 ற்கும் மேற்பட்ட குடிசைகள் தீக்கிரை..!

இந்திய தலைநகரான புதுடில்லியில் இடம்பெற்ற தீ விபத்தில் 130 ற்கும் மேற்பட்ட குடிசைகள் தீக்கிரையாகியுள்ளன.

இந்த தீ விபத்து நேற்றிரவு இடம்பெற்றதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

தீயணைப்பிற்கு 15 தீயணைப்பு வாகனங்கள் பயன்படுத்தப்பட்டுள்ள நிலையில் உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லையென தெரிவிக்கப்படுகின்றது.

விபத்து காரணம் கண்டறியப்படாத நிலையில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Social Share

Leave a Reply