தலைமன்னார் ஊர்மனை கிராம பகுதியில் பாலியல் வன்புணர்வுக்குட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி அமைதிப் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.
இந்த போராட்டம் இன்று (19) காலை மன்னார் நீதவான் நீதிமன்ற வளாகத்திற்கு முன் கிராம மக்களால் முன்னெடுக்கப்பட்டது.

குறித்த சிறுமியின் மரணத்திற்கு விரைவில் நீதி கிடைக்க வேண்டும் என கோரியும் விசேட நீதிபதிகள் அடங்கிய குழு ஒன்று குறித்த வழக்கை விசாரிக்க கோரியும் போராட்டம் இடம்பெற்றது.

“பாதிக்கப்பட்ட சிறுமிக்கு நீதி வழங்கு,சிறுவர்களை உயிர் போல் காப்போம் உள்ளிட்ட பல்வேறு வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளை ஏந்தியவாறு போராட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது.
தலைமன்னார் ஊர்மனை கிராமத்தில் 10 வயது சிறுமி கடந்த 16 கொலை செய்யப்பட்டு சடலமாக மீட்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.