யாழ்ப்பாணத்தில் பேருந்தின் மிதி பலகையில் பயணித்த இளைஞர் ஒருவர் தவறி விழுந்து உயிரிழந்துள்ளதாக யாழ்.பொலிசார் தெரிவித்துள்ளனர்.
யாழ்ப்பாணம் நல்லூர் பகுதியிலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
சிலையடி பகுதியைச் சேர்ந்த அழகராசா நிதர்ஷன் என்ற 29 வயதுடைய இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இந்த விபத்து தொடர்பில் வடமாகாண சபை போக்குவரத்து அதிகாரசபை அதிகாரிகள் விசேட விசாரணைகளை ஆரம்பித்துள்ளதுடன், குறித்த பஸ்ஸின் வீதி அனுமதிப்பத்திரமும் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.