அனைத்து பல்கலைக்கழக மாணவர்களின் எதிர்ப்பு நடவடிக்கையை கலைப்பதற்கு பொலிஸார் நீர்த்தாரை பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.
புஞ்சி பொரளை பகுதியில் இன்று பிற்பகல் நீர்தாரை பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இலவசக் கல்வி – இலவச சுகாதாரம் உள்ளிட்ட பொதுமக்களின் உரிமைகள் பறிக்கப்படுவதைக் கண்டித்து இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
நீர்த்தாரை பிரயோகத்தை பொருட்படுத்தாது மாணவர்கள் கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இலவச கல்வியை தனியார் மயப்படுத்தும் தேசிய கல்வி கொள்கையை மீளப்பெறுமாறு வலியுறுத்தி பல்கலைக்கழக மாணவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதன் போது அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் மதுஷான் சந்திரஜித் மற்றும் சப்ரகமுவ பல்கலைக்கழகத்தை சேர்ந்த மற்றுமொரு மாணவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர், பிரதி பொலிஸ்மா அதிபர் நிஹால் தல்துவ தெரிவித்தார்.