ஜனாதிபதி பதவியில் இருந்து தம்மை வெளியேற்றிய சதி” எனும் பெயரில் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ புத்தகம் ஒன்றை எழுதியுள்ளார்.
2022 ஆம் ஆண்டு தாம் எதிர்கொண்ட சவால்கள் தொடர்பில் இந்த புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
“இந்த புத்தகத்தின் உள்ளடக்கம், ஜனநாயக ரீதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனாதிபதியை வெளிநாட்டு தரப்பினரின் தலையீடு மற்றும் இலங்கை சமூகத்தின் பல குறிப்பிட்ட பிரிவினரின் பங்கேற்புடன் முன்னெடுக்கப்பட்ட சதிகள் மற்றும் வன்முறை கிளர்ச்சிகள் மூலம் வெளியேற்றப்பட்ட கதை” என அந்த புத்தகத்தின் பின் அட்டையில் எழுதப்பட்டுள்ளது.
இந்த புத்தகம் நாளை உத்தியோகப்பூர்வமாக வெளியிடப்படும் என தெரிவிக்கப்படுகின்றது.