புத்தளம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீமுக்கு இன்று(06) முதல் ஒரு மாதத்திற்கு நாடாளுமன்ற தடை விதிக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்றத்தை அவமதித்ததாக சிறப்புரிமைகள் குழு தீர்மானித்துள்ளமையால் இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
அலி சப்ரி ரஹீம் தங்கம் மற்றும் தொலைபேசிகளை நாட்டிற்கு கொண்டுவந்த சம்பவம் தொடர்பில் சிறப்புரிமைகள் குழு இந்த தீர்மானத்தை மேற்கொண்டுள்ளதாக பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ஸ நாடாளுமன்றில் தெரிவித்துள்ளார்.