145வது நீலப் போர் இன்று ஆரம்பம்!

145வது றோயல் – புனித தோமஸ் கல்லூரிகளுக்கு இடையிலான கிரிக்கெட் போட்டி கொழும்பு SSC மைதானத்தில் இன்று (07.03) ஆரம்பமாகவுள்ளது.

இன்று ஆரம்பிக்கும் இந்தப் போட்டி 3 நாட்களுக்கு நடைபெறவுள்ளது.

இலங்கை யூத் கிரிக்கெட் அணியின் தலைவர் சினெத் ஜயவர்தன தலைமையில் றோயல் கல்லூரி அணியும், மஹித் பெரேராவின் தலைமையில் புனித தோமஸ் கல்லூரி அணியும் பங்குபற்றவுள்ளார்.

இதுவரை நடைபெற்ற போட்டிகளில் றோயல் அணி 36 போட்டிகளிலும், புனித தோமஸ் அணி 35 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளன.

போட்டியில் வெற்றி பெறும் அணி ஒவ்வொரு ஆண்டும் டி. எஸ். சேனநாயக்க நினைவுச் சின்னத்தை தங்கள் பாடசாலைக்கு எடுத்துச் செல்வதற்கான சந்தர்ப்த்தை பெற்றுக்கொள்கின்றனர்.

Social Share

Leave a Reply