பொலிஸ்மா அதிபர் நியமனத்திற்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தி மனு தாக்கல்

பொலிஸ்மா அதிபர் பதவிக்கு தேஷபந்து தென்னகோன் நியமிக்கப்பட்டமையை சவாலுக்கு உட்படுத்தி, ஐக்கிய மக்கள் சக்தியினால் உயர் நீதிமன்றில் இன்று அடிப்படை உரிமை மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

கட்சியின் ஊழல் எதிர்ப்புக் குழு உறுப்பினர்களான நிரோஷன் பாதுக்க மற்றும் ஆனந்த பாலித ஆகியோரால் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

குறித்த மனுவின் பிரதிவாதிகளாக பொலிஸ்மா அதிபர் தேஷபந்து தென்னகோன் மற்றும் சபாநாயகர் தலைமையிலான அரசியலமைப்பு பேரவை ஆகியன குறிப்பிடப்பட்டுள்ளன.

தேஷபந்து தென்னகோனை பொலிஸ்மா அதிபராக நியமிப்பதற்கு அரசியலமைப்பு பேரவை உத்தியோகபூர்வமாக அனுமதி வழங்கவில்லை என மனுதாரர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

Social Share

Leave a Reply