சர்வதேச சந்தையில் சீனியின் விலை 2.89 வீதத்தால் அதிகரித்துள்ளது.
சீனி உற்பத்தியில் உலகின் முன்னணி நாடான பிரேஸிலில் உற்பத்தி குறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை இந்தியாவின் சீனி உற்பத்தி 9 வீதத்தால் குறைவடைந்துள்ளதுடன் சீனி ஏற்றுமதிக்கு இந்தியா விதித்துள்ள கட்டுப்பாடுகளும் விலை அதிகரிப்புக்கு காரணம் என கூறப்படுகின்றது.