திருத்தப்பணிகளின் பின்னர் கோள் மண்டலம் இன்று(13) முதல் மீள திறக்கப்படுள்ளது.
இதன்படி, செவ்வாய்க்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை காலை 10 மணிக்கு பாடசாலை மாணவர்கள் கோள் மண்டலத்தை பார்வையிட சந்தர்ப்பம் வழங்கப்படவுள்ளது.
அத்துடன்,சனிக்கிழமைகளில் காலை 10 மணிக்கு பொதுமக்களுக்கு சந்தர்ப்பம் வழங்கப்படவுள்ளது.
திருத்தப்பணிகளுக்காக கோள் மண்டலம் கடந்த மாதம் 27 ஆம் திகதி தற்காலிகமாக மூடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.