வெப்பநிலை தொடர்பில் புதிய அறிவிப்பு!

இலங்கையில் நிலவும் வெப்பமான காலநிலை இந்த ஆண்டு மே மாதம் வரை தொடரும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

தற்போது நிலவும் வறட்சியான காலநிலை மார்ச் மாதத்தின் நடுப்பகுதியிலிருந்து ஏப்ரல் இறுதி வரை தொடரும் என மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மே மாதத்தில் தென்மேற்கு பருவமழை ஆரம்பமாகும்போதுதான் வெப்பமான காலநிலை முடிவுக்கு வரும் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதேவேளை, மேல், சப்ரகமுவ, வடமேல் மற்றும் தென் மாகாணங்கள் மற்றும் அனுராதபுரம், வவுனியா, மன்னார் மற்றும் மொனராகலை மாவட்டங்களுக்கான வெப்ப சுட்டெண் அதிகரிக்கும் எனவும், மனித உடலில் உணரப்படும் வெப்பக் குறியீடு ‘எச்சரிக்கை நிலை’ வரை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Social Share

Leave a Reply