மேல் நீதிமன்றில் முன்னாள் சுகாதார அமைச்சர் மனுத்தாக்கல்

தரமற்ற இம்யூனோகுளோபுலின் மருந்து கொள்வனவு தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தன்னை பிணையில் விடுவிக்குமாறு
கோரி, கொழும்பு மேல் நீதிமன்றில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவை பிணையில் விடுவிப்பதற்கு மாளிகாகந்த நீதவான் நீதிமன்றம் நேற்று (14) மறுத்ததுடன்,
வழக்கு விசாரணை முடியும் வரை அவரை விளக்கமறியலில் வைக்குமாறும் உத்தரவிட்டது.

பொதுச் சொத்துச் சட்டத்தின் கீழ் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள தம்முடைய பிணைக் கோரிக்கையை நீதவான் நிராகரித்தமை
சட்டத்திற்கு முரணானது என ரம்புக்வெல்ல தனது பிணை விண்ணப்பத்தில் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கமைய குறித்த மனு எதிர்வரும் திங்கட்கிழமை (19) பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.

Social Share

Leave a Reply