மன்னார் மடு பொலிஸ் பிரிவில் கடந்த 12ம் திகதி பெண்னொருவர் யானை மிதித்து உயிரிழந்துள்ளார்.
குறித்த பெண் வீட்டின் வளவிற்குள் யானை ஒன்று நின்றதைக் கண்டு குழந்தையுடன் வீட்டை விட்டு வெளியேற முற்பட்ட போது, தடக்குப் பட்டு வீழ்ந்தமையால் அருகில் நின்ற யானை மிதித்ததன் காரணமாக உயிிழப்பு ஏற்பட்டுள்ளது.
கயனி மதுவயந்தி குமாரி எனும் 29 வயதுடைய பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
உயிரிழந்த பெண், தொழில் நிமித்தம் வாவுனியாவிலிருந்து கடந்த 4 மாதங்களுக்கு முன்பு மன்னார் மடு பிரதேசத்தைச் சேர்ந்த கட்டையடம்பன் பகுதிக்கு வருகை தந்திருந்த நிலையிலேயே இந்த சம்பவம் ஏற்பட்டுள்ளது.