தேசிய கல்வியியற் கல்லூரிகளுக்கு மாணவர்களை உள்வாங்குவதற்கான விண்ணப்பம் கோரல்

2021/2022 ஆம் ஆண்டுக்கான தேசிய கல்வியியற் கல்லூரிகளுக்கு மாணவர்களை உள்வாங்குவதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் இன்று வெளியிடப்பட்டது.

மாணவர்கள் இன்று முதல் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க முடியும் என கல்வியமைச்சு தெரிவித்துள்ளது.

இதற்கான விண்ணப்பங்கள் ஒன்லைன் மூலம் சமர்ப்பிக்கப்பட வேண்டும் என்பதுடன் தகுதியானவர்களுக்கான தேர்வு இம்முறை ஒன்லைன் மூலம் இடம்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளுக்கமைய மாணவர்களை உள்வாங்குவதற்கு கல்வி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.

விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதற்கான காலம் அடுத்த மாதம் 5ஆம் திகதியுடன் நிறைவடையவுள்ளது.

Social Share

Leave a Reply