தலைமன்னார் பகுதியில் படகில் மீன் பிடிக்க கடலுக்குச் சென்ற மீனவர் ஒருவர் கடந்த (12/03) செவ்வாய்க்கிழமை நீரில் மூழ்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இச்சம்மபவம் குறித்து மேலும் தெரியவருவதாவது தலைமன்னார் பியர் மீன்பிடி துறையிலிருந்து வெளிக்கள இயந்திரப் படகு ஒன்றின் மூலம் காலை ஏழு மணிக்கு குறித்த மீனவர் தனிமையில் மீன் பிடிக்கச் சென்றுள்ளார்.
பின் கரைக்கு வந்து பிடிக்கப்பட்ட மீனை கரையில் கொடுத்து விட்டு மீண்டும் பத்து மணியளவில் கடலுக்குச் சென்றுள்ளார். இதன் போதே இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு மரணித்தவர், தலைமன்னார் பியர் பகுதியைச் சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தை யான மரியசெல்வம் செங்கோல் பர்ணாந்து வயது 55 என்பவராவார்.
கடலுக்குள் ஆளில்லாத படகு ஒன்று நீண்ட நேரமாகச் சுற்றிக் கொண்டு இருந்ததைக் கண்ட மீனவர்கள்
படகின் சம்மாட்டிக்கு தெரிவித்ததைத் தொடர்ந்தே கடலில் வீழ்ந்தவரையும் படகையும் மீட்டுள்ளனர்.
பின் கடற்படையினரின் உதவியுடன் சடலம் தலைமன்னார் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டதுடன்
இவரின் உடற்கூற்று பரிசோதனையில் நீரில் மூழ்கியமையால் எற்பட்ட மரணமெனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவரின் மரண விசாரைனையை மேற்கொண்ட மரண விசாரனை அதிகாரி ஏ.ஆர்.நசீர் உடற்கூற்று பரிசோதனைக்குப் பின் இவரின் உடல் உறவினரிடம் ஒப்படைக்கப்படவுள்ளது.