தமிழ் பேசும் மக்களுக்காக அவசர தொலைபேசி இலக்கம் தமிழ் பேசும் மக்களுக்காக பொலிஸ் உதவிகளைப் பெற்றுக்கொள்வதற்கு அவசர தொலைபேசி இலக்கமொன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இதன்படி, 107 என்ற இலக்கைத்தை தொடர்பு கொள்வதனூடாக தமிழ் மக்கள் உதவிகளைப் பெற்றுக்கொள்ள முடியும் என பொலிஸ் ஊடக பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பணிப்புரைக்கமைய பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் மற்றும் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் ஆகியோரால் இந்த அவசர தொலைப்பேசி இலக்கம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
குறிப்பாக வடக்கு, கிழக்கு மக்கள் தமிழ் மொழியில் பொலிஸ் உதவிகளைப் பெற்றுக்கொள்ள முடியும் என பொலிஸ் ஊடக பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் நிஹால் தல்துவ மேலும் தெரிவித்துள்ளார்.