புதிய தொழில் முயற்சியாளர்களை உருவாக்குவோம்-சஜித்

ஐக்கிய மக்கள் சக்தி பாடசாலைகளுக்கு ஸ்மார்ட் கல்வியை வழங்குவதோடு, பாடசாலை கட்டமைப்பிலேயே அறிவை மையமாகக் கொண்ட தொழில்முயற்சியாண்மைகளை உருவாக்கவும் எதிர்பார்க்கிறது. பாடசாலை காலத்திலேயே வணிக முகாமைத்துவம் மற்றும் தொழில் முனைவு சிந்தனைகளை உருவாக்க தேவையான தூண்டுதல்கள் வழங்கப்பட வேண்டும். பாடசாலை பரீட்சைகளில் தேர்ச்சி பெற்று, பல்கலைக்கழகங்களில் பட்டம் பெற்று வெளியாகிய பிறகு, தொழில்முனைவோராக மாறுவதற்கான பாதை உருவாக்கப்பட்டு, தொழிலை முயற்சியாண்மைகளை ஆரம்பிப்பதற்கான ஆரம்ப மூலதனம் வழங்கப்படும். இதன் மூலம் இலட்சக்கணக்கான புதிய தொழில் முயற்சியாளர்களை உருவாக்கும் திட்டம் உள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

பிரபஞ்சம் தகவல் தொழிநுட்ப வேலைத்திட்டத்தின் கீழ், 125 ஆவது கட்டமாக 10 இலட்சம் ரூபா பெறுமதியான ஸ்மார்ட் வகுப்பறை உபகரணங்கள் மாத்தறை, அக்குரஸ்ஸ, மாலிம்பட ஸ்ரீ சுமேத மகா வித்தியாலயத்திற்கு வழங்கி வைக்கும் நிகழ்வு இன்று (17.03) இடம்பெற்றது.

இந்நிகழ்வில், ​​கல்லூரியின் நடனம் மற்றும் அரங்கேற்றங்கள் குழுவினருக்குத் தேவையான ஆடைகளை பெறுவதற்குத் தேவையான ஒரு இலட்சம் ரூபா நிதியையும் நன்கொடையாக வழங்கி வைத்தார் என எதிர்க்கட்சி தலைவர் ஊடக பிரிவி வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தொழில்முனைவோருக்கு ஆரம்ப மூலதனத்திற்கான அணுகலை உருவாக்கி தருவோம். இது பாடசாலைகள் மூலமாகவே நடைபெறும், அறிவை மையமாகக் கொண்ட பொருளாதாரத்தை ஆரம்பிப்போம். இங்கு ஸ்மார்ட் இளங்கலைப் பட்டம் பெற்று சமூகத்தில் வேலைக்காக வரிசையில் நிற்காது சொந்தக் காலில் நிற்பதற்கான சந்தர்ப்பம் உதயமாகும் என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

தேர்தல் வருடம் என்பதால், டிஜிட்டல், ஸ்மார்ட், வைபை போன்றவற்றை அரசாங்கம் தலைமையிலான பல்வேறு கட்சிகள் பேசி வருகின்றன. நாட்டுக்கே வைபை தருவோம் என்று சொல்லி நாட்டையே ஏமாற்றினார்கள்.நாட்டில் கல்வித் துறையில் காணப்படும் ஏற்றத்தாழ்வு களையப்பட வேண்டும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் மேலும் கூறினார்.

சமூகத்தின் உயரடுக்கு உயர்தரக் கல்வியைப் பெறுகிறது, ஆனால் பெரும்பான்மையானவர்கள் குறைபாடுள்ள கல்வியையே பெறுகிறார்கள். இந்தச் சமூக ஏற்றத்தாழ்வில் பெரும்பான்மையான பிள்ளைகள் உயர் சமூகத்திற்குச் செல்ல முடியாமல், சமூக ரீதியிலான கோபமும் வெறுப்பும் உருவாகி இளைஞர்களின் கிளர்ச்சிகள் எழுவதால், இது நாட்டுக்கு ஏற்ற போக்கல்ல. எனவே இந்தக் கல்வி ரீதியிலான ஏற்றத்தாழ்வு நிறுத்தப்பட வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் இங்கு கூறியுள்ளார்.

தான் பொருட்களை பகிர்ந்து வருவதாக சமூக ஊடகங்களில் அவமானப்படுத்துவதாகவும், இவ்வாறு பகிர்வதால் தான் சமூக வலுவூக்கத்தையே ஆற்றிய வருவதாகவும்,இவ்வாறு சமூகத்தை வலுவூட்டுவது ஒரு உண்மையான அரசியல்வாதியின் பொறுப்பாகும் என்றும் அவர் தெரிவித்தார்.

காட்போட் சோசலிசவாதிகளே இவ்வாறு அதிகமாக பகிர்வதாக குற்றச்சாட்டை முன்வைத்து வருகின்றனர். இவ்வாறு குற்றச்சாட்டை முன்வைக்கும் காட்போட் சோசலிசவாதிகளின் பிள்ளைகள் தனியார் பல்கலைக்கழகங்களுக்கும் சர்வதேச பாடசாலைகளுக்கும் செல்கின்றனர்.இவர்கள் சொல்வதற்கும் செயற்படுவதற்கும் இடையில் பாரிய வித்தியாசம் இருப்பதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இங்கு மேலும் தெரிவித்தார்.

Social Share

Leave a Reply