கிழக்கு பல்கலைக்கழக ஊழியர்கள் போராட்டம்

சம்பளம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளுக்கு தீர்வு கோரி கிழக்கு பல்கலைக்கழக ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

மட்டக்களப்பு அரசடியிலுள்ள கிழக்குப் பல்கலைக்கழக வெளிவாரி கற்கைகள் நிலைய முன்பாக நேற்று போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

நாடளாவிய ரீதியில் அரச பல்கலைக்கழகங்களில் முன்னெடுக்கப்படும் தொழிற்சங்க நடவடிக்கைகளுக்கு அமைய‌ போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது நூற்றுக்கும் மேற்பட்ட கிழக்குப் பல்கலைக்கழக ஊழியர்கள் ஒன்றினைந்தனர்.

தீர்வு கிடைக்காத பட்சத்தில் வாரந்தோறும் போராட்டம் இடம்பெறும் என போராட்டக்காரர்கள் தெரிவித்தனர்.

Social Share

Leave a Reply